இன்று தொடங்குகிறது மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு!

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு  ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த முறை 4,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, ஊரக மருத்துவ பணிகள் துறை சார்பில் உள்ள மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment