திரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.! யாரு ஹீரோ தெரியுமா.?

லடாக், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்குள்

By manikandan | Published: Jul 04, 2020 11:12 PM

லடாக், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்குள் நடந்த சண்டையை மையமாக கொண்டு பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்.

இந்திய - சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி, இரு நாட்டு ராணுவவீரர்களுக்கும் சண்டை எழுந்தது. இந்த சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும், இதில், படுகாயமுற்று இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் முக்கிய ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைகளில் தற்போது வரையில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை மையமாக கொண்டு பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரே தனது அஜய் தேவ்கன் பிலிம்ஸ் சார்பாக செலக்டெட்  மீடியா ஒர்க்ஸ் எனும் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம். தற்போது இந்த படத்திற்கான கதை, திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை யார் இயக்க உள்ளர்? யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc