படத்தின் வசூலை கஜா புயலின் பாதிப்புக்கு வழங்கிய சர்கார்…!!!

நடிகர் விஜய் முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றிப்பெற்ற சர்கார் தீபாவளிக்கு வந்தது.இன்னமும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.வசூலில் அசுரவேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை மிரட்டி தாக்கிய புயல் கஜா .இந்த புயலால் 4 மாவட்ட மக்கள் உட்பட தமிழகத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் 40 லட்ச நிதி உதவியை  தன் மக்கள் இயக்கம் மூலம்  நேரடியாக சென்று சேரும்படி செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சர்கார் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர்கள் தமிழகத்தை தாக்கிய கஜா புயலுக்கு உதவுவதற்காக  படத்தின் ஒரு நாள் வசூல் முழுவதும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.நமக்கு சோறு போட்ட தெய்வங்கள் இன்று சோறுக்காக ஏங்கி கலங்கி நிற்கின்றது.வாருங்கள் டெல்டாவின் துயர் துடைப்போம்.

 

DINASUVADU