இலவசம்.., இலவசம்..! தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 2 கிலோ தக்காளி இலவசம்..!

சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் தினமும் அதிகரித்து வருகின்றனர். ஆனால், மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. மக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவுவதால் தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்க ஒரு புதுமையான முயற்சியை பின்பற்றியுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திவரும் பொதுமக்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, பிஜாப்பூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை வேகமும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

தக்காளி எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி பெற மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். பல பெண்கள் மருத்துவ மையத்திலிருந்து வெளியேறும்போது தக்காளி பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு செல்கின்றனர். வரும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

author avatar
murugan