பிளஸ் 2 வரை இலவசக் கல்வி… நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை!

Congress: 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் பா,சிதம்பரம் தாமையிலான குழுவினர் தறித்த தேர்தலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதில், 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அதேசமயம், நீட், CUET உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் கட்டாயம் இல்லை என்றும் நுழைவுத்தேர்வுகள் வேண்டுமா? வேண்டாமா என்பதை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம். தேசிய கல்வி கொள்கையை மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தும் மேற்கொள்ளப்படும். மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்