மோர்கன் ஸ்டார்க்கை பார்த்து பயந்து விட்டார் என விமர்சனம் செய்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

கடந்த 25-ம் தேதி  நடந்த போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய  ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் வேக பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய பந்தில் 4 ரன்னுடன் வெளியேறினர்.இப்போட்டியில் கேப்டன் மோர்கன் விளையாடிய விதத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்து உள்ளார்.
https://twitter.com/KP24/status/1143569356972023808
கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில் “ஸ்டார்க் வீசிய பந்தை பார்த்து மோர்கன் பயப்படுவது போல தெரிகிறது என கூறினார்.மேலும் இன்னொரு பதிவில் “ஸ்டார்க் வீசிய முதல்  பந்தை மோர்கன் ஸ்கொயர் லெக்கில் ஒதுக்கி தடுமாறியதை பார்க்கும் போது இங்கிலாந்து அணி  அடுத்த வாரம் சிக்கலை சந்திக்க போவதாக தெரிகிறது.
https://twitter.com/KP24/status/1143785249488429056
அப்படி ஓன்று நடக்க கூடாது என நம்புகிறேன்.மேலும் சமீபகாலமாக ஒரு கேப்டன் தங்களது பலவீனத்தை காட்டியதை நான் பார்த்தது இல்லை என கூறினார்.

author avatar
murugan