தஞ்சையில் முன்னாள் அமைச்சர் மறைவு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்.!

தஞ்சையில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் உபயதுல்லா வீட்டிற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.  

கடந்த 19ஆம் தேதி தஞ்சையில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் . திமுக சார்பில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

நேரில் ஆறுதல் : இந்நிலையில், இன்று மற்றும் நாளை 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றுள்ளார். விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிவ் தஞ்சையில் மேரிஷ்கர்னார் பகுதியில் கல்லுக்குளம் சாலையில் உள்ள மறைந்த உபயதுல்லா வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.  அங்கு, உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.

திருவாரூர் பயணம் : இதனை அடுத்து, திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் பணிகள் குறித்தும் ஆய்வு  மேற்கொண்டு, நாளை திருவாரூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்வில் முதலவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment