ஐஐடிக்கு எதிராக போராட்டம் – 120 பேர் மீது வழக்குப்பதிவு!

ஐஐடி மாணவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் பட்டியல் அணி தலைவர் உள்பட 120 பேர் மீது வழக்குப்பதிவு.

காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு:

RANJANKUMAR

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகளுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஐடி மாணவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு காங்கிரஸ் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய காங்கிரஸ் பட்டியல் அணி ரஞ்சன்குமார் உள்பட 120 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஐடிக்களில் மாணவர்கள் தற்கொலை:

chennaiIIT

மும்பை, சென்னை ஐஐடிக்களில் மாணவர்கள் தற்கொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு இந்திய மாணவர்கள் சங்கம் கண்டங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்  தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஐஐடிக்களில் தொடரும் தற்கொலைகளை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்:

சென்னை ஐஐடி வளாகத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிப்பதையோ, மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையோ நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தீப்பந்தம் கொளுத்தி போராட்டம்:

fireprotest

மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 வரை நாடாளுமன்ற அறிக்கையின்படி 122 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 72 மாணவர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்தார். இந்த சமயத்தில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தீப்பந்தம் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின், ரஞ்சன்குமார் உள்பட 120 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment