கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு – முதல்வர் இரங்கல்..!

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு முதல்வர் இரங்கல். 

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது, மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் பதிவில், ‘பீலே கால்பந்தாட்டத்தின் கிங் மட்டுமல்ல, 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளில் ஒருவராகவும், மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியவராகவும் இருந்தார். எப்போதும் எல்லா வகையிலும் விளையாட்டின் சின்னமாக இருக்கும் அவர் ஒரு மறக்க முடியாத பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment