மறைந்த நடிகர் புனித் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!

punith

நடிகர் புனித் ராஜ்குமார் தனது மரணத்திற்கு முன்பாக கடைசியாக  நடித்த ஜேம்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரது மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் புனித் ராஜ்குமார் தனது மரணத்திற்கு முன்பாக கடைசியாக  நடித்த ஜேம்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரும் மார்ச் 17-ஆம் தேதி அவரின் பிறந்த நாள் என்பதால்  இப்படத்தை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.