மீண்டும் துப்பாக்கி சூடு.! ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் பரபரப்பு.!

  • டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே நேற்று அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
  • இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதில் இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே நேற்று அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. சில தினங்களுக்கு முன்பு அமைதியான நிலையில் போராட்டம் நடைபெற்ற போது மர்ம நபர் உள்ளே புகுந்து  துப்பாக்கி சூடு நடத்தினார். அங்கு சுற்றி போலீஸ் செய்தியாளர்கள் இருந்தும், வானத்தை நோக்கியும், மாணவர்களை நோக்கியும், ஜெய் ஸ்ரீ ராம் என கூச்சலிட்டுக்கொண்டே துப்பாக்கி சூடு நடத்தினார். பின்னர் இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு கல்லூரி மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸ் வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் உத்ரபிரதேசத்தை சேர்ந்த ராம் பகத் கோபால் என்றும், இவருக்கு 18 வயது என்றும் தெரிவித்தனர். தற்போது இவரை  போலீஸ் காவலில் 14 நாட்கள் வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2 நாட்கள் கழித்து மீண்டும் ஜாமியா மிலியா பல்கலை அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் சிஏஏவிற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. சிஏஏவிற்கு எதிராக பெண்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பின்னர் இதை எதிர்க்கும் விதத்தில் இந்துத்துவா இளைஞர் ஒருவர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார். பிறகு இவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதில் இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக துப்பாக்கி சூடு நடந்துருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் இரண்டு நபர்கள் பைக்கில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து இருந்தார் என்றும் தகவல் வந்துள்ளது. இது தொடார்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில், குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாணவர்கள் வெவ்வேறு தகவல்களை அளிப்பதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்