கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு.!

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வார்டில் நேற்று ஒரே நாளில் 5 பேர் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் 8 மாத குழந்தை , இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆவர்.

 கடந்து பத்து நாட்களுக்கு முன் 8 மாத குழந்தை தன் பெற்றோருடன் துபாயிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். குழந்தை உட்பட 5 பேரின் இரத்தம் மற்றும் சளி மாதிரியை பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிக்சை பெற்று வந்த இரண்டு பெண்களில் ஒருவர் நேற்று திடீரென இறந்தார். அவருக்கு வயது 59.

இது குறித்து மருத்துவர் கூறுகையில் , இறந்தவரின் சளி மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பின்னரே இவர் கொரோனா காரணமாக இறந்தாரா..? என்பது தெரியவரும் என கூறினார்

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.