திரையரங்குகளில் 50%-க்கும் அதிகமானோரை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி!

திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வருடம் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில் இந்தியாவிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திரையரங்குகள், பள்ளிகல்வித்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வின் படி, தற்போது அமலில் உள்ள பொது முடக்க விதி முறைகளை கையாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொது முடக்கும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், திரைக்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில்  ஆழ்ந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.