‘பிரியாவிடை From தம்பி’ – செஸ் ஒலிம்பியாட் காணொளி

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த காணொளி இந்தியா நிறைவு விழாவில் ஒளிபரப்பப்பட்டது.

மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது.  இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த காணொளி இந்தியா நிறைவு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகம் நடத்து முடிவை எடுத்தது குறித்து காணொளியில் இடம் பெற்றுள்ளது. போட்டி தொடக்கம் முதல் நிறைவு வரை கடந்து வந்த பாதை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

மேலும், நேப்பியர் பாலத்தின் ஒரு பகுதி கருப்பு வெள்ளை நிறத்தில் மாற்றப்பட்டது குறித்து வீடியோவில் விளக்கப்பட்டது. அதன் பின் ‘பிரியாவிடை From தம்பி’ என செஸ் ஒலிம்பியாட்டின் அடையாளமான குதிரை சொல்வது போல் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment