ஃபானி புயல் பாதிப்பு : ஒடிஷா மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கியது தமிழக அரசு

ஃபானி புயலால் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை வழங்கியது தமிழக அரசு.

ஒடிசாவில் பூரி பகுதியில் ஃபானி புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார்.அதில்,ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் .ஒடிஷா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை வழங்கியது தமிழக அரசு.

 

Leave a Comment