பாகிஸ்தான் அணி தோற்றத்தால் கடுப்பாகி அணியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு!

உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா,பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியது.மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை போட்டியி ல் ஏழாவது முறையாக மோதியது.
அப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதனால் 7-வது முறையும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் மேலும் தற்போது கிரிக்கெட் வாரியத்தில் உள்ள தேர்வு குழுக்களிலும் அனைத்தையும் நீக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தக்க  பதிலளிக்க வேண்டுமென கிரிக்கெட் வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது  கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் முன்னாள் கேப்டன் இன் சமாம் உக் ஹக் . நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் மூன்று புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 9 -வது இடத்தில் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.

author avatar
murugan