“மாமன்னன்” படப்பிடிப்பில் இணைந்தார் ஃபகத் பாசில்.!

நடிகர் ஃபகத் பாசில் தனது நடிப்பால் மாலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமாகி வருகிறார். தற்போது,இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி, ஃபஹத், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து முதல் ஷெட்யூலை முடித்த நிலையில், படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தனது மனைவி நஸ்ரியாவுடன் விடுமுறைக்காக வெளியூர் சென்ற ஃபகத் தற்போது தனது பகுதிகளை நடிக்க ‘மாமன்னன்’ படதிற்கு வந்துள்ளார். அதன்படி, இன்று ஃபஹத் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here