மின் அளவீட்டை புகைப்படமெடுத்து தொழிற்சாலைகள் அனுப்பலாம்.!

மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் அளவை தொழிற்சாலைகள் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தாழ்வழுந்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின் அளவீட்டை அனுப்பலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தாழ்வழுந்த (LT/LTCT) ஆலை, வணிக நிறுவனங்களுக்கு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வேண்டுகோள் விடுட்டுள்ளது. மின் அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் எழுத்து மற்றும் பகைப்படமெடுத்து அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி, இளநிலை பொறியாளர்களுக்கு அனுப்பலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் http://WWW.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் உதவி பொறியாளர் அலுவக கைபேசி, இ-மெயில் விவரத்தை அறியலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் செலுத்திய மின்கட்டண தொகையை மார்ச், ஏப்ரலுக்கு செலுத்தலாம் என முன்பு கூறப்பட்டது. முந்தைய மாத கட்டணத்தை செலுத்துவது தற்போதைய மின்நுகர்வு அடிப்படையில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் புகாரை தொடர்ந்து தமிழ்நாடு மின்சாரவாரியம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்