நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? – பிரிட்டனில் ஆய்வு

நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு.

முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் பல நாடுகள், தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி கண்டறிய பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என பல நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ரேபிட் கிட்  கருவிகள் மூலம் அரை மணி நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றாலும், இந்த கருவிகளுக்கு உலகம் முழுவதும் காத்திருந்து பெற வேண்டிய நிலை ஏற்படுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் துர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் வெப்பமண்டல மருந்துக்கான லண்டன் கல்வி மையத்துடன் அறக்கட்டளை அமைப்பு ஒன்று இணைந்து, நாய்களின் மோப்பத்திறன் மூலம் கொரோனா வைரஸை கண்டறிய முடியுமா என ஆய்வு தொடங்கியுள்ளது.

ஏற்கனவே  மலெரியா குறித்த ஆய்வில், நாய்களின் மோப்பத்திறன் உதவியது. அது போல கோவிட் 19-க்கும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு சாத்தியமானால் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்றை வேகமாக கண்டறிய முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

அதன்மூலம் யாரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், யாருக்கு கூடுதல் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் விரைவாக அடையலாம் காணலாம் என்கின்றனர். மேலும் பாக்டீரியா மற்றும் இதர நோய்களை அறியும் திறன் நாய்க்கு உள்ளதற்கு ஆதாரம் இருப்பதாகவும், கொரோனா பரவலை வராமல் தடுப்பதிலும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கலாம் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.