எந்த கார்டும் தேவையில்லை : முகத்தை காட்டினால் போதும் பணம் செலுத்தப்பட்டுவிடும்!

சீனாவில் தற்போது முகத்தை மட்டும் காட்டி அவரவர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முன்பு போல ஏடிஎம் கார்டு, டெபிட் கார்ட் போன்ற கார்ட்கள் இல்லாமல் முகத்தை மட்டும் காட்டினால் போதும், உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் பர்சேஸ் செய்ததற்கான மதிப்பு உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.

சீனாவில் கார்ட் உபயோகப்படுத்தி கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சிலர் நோட்டமிட்டு அந்த வங்கிகளில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி எடுத்துவிடுகின்றனர். அதனை தடுக்கும் நோக்கில் இப்படி முகத்தை காட்டி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் ஐஃபியூரி நிறுவனமும் அலிபாபா நிறுவனத்தின் அலி பே என்ற நிறுவனமும் இந்த முகத்தை வைத்து பரிவர்த்தனை செய்யும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பணத்தை செலுத்துவதற்காக ஒரு மெஷின் முன்னாடி முகத்தை காட்ட வேண்டுமா என்று பாதிக்கும் மேற்பட்டோர் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க,  இன்னொரு புறம் இதன் மூலம் வாடிக்கையார்களின் தேவை வாடிக்கையாளர்களின் தேவை தெரியவரும். அதன் மூலம் விற்பனை சந்தையை தேவைகேற்ப விரிவுபடுத்தலாம் என்றும் ஒரு தரப்பும் கூறி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.