உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும் துவரம்பருப்பின் உன்னத பயன்கள்….!!!

நமது அன்றாட வாழ்வில், நமது சமையல்களில் பல பொருட்கள் இன்றியமையாத இடத்தை பிடித்தாலும், அவரில் சில பொருட்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அவற்றில் ஒன்று தான் துவரம் பருப்பு. இது பல சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொணடது.

துவரம் பருப்பில் உள்ள சத்துக்கள் :

Image result for துவரம் பருப்பு

தமிழர் சமையலிலும் துவரம் பருப்பு ஒரு முக்கிய உணவு பொருளாக அமைகிறது. துவரம் பருப்பு அதிகப்புரதசத்து கொண்டது. மேலும் இதில் தாது உப்புக்களான செம்புச்சத்து, இரும்புசத்து, மாங்கனீசு, பாசபர்ஸ, மெக்றீசியம் ஆகியவை அதிகளவு, கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. மேலும் இந்த பருப்பில் அதிக அளவில் புரோடீன் உள்ளது.

வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு :

Image result for வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு :

துவரம் பருப்பில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தை குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி பண்பினையும் கொண்டுள்ளன. இப்பண்பானது துவரையின் இலைகள், பயிறு, பருப்பு எல்லாவற்றிலும் காணப்படுகிறது. அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டிற்கு துவரையை அரைத்துப்போடும் வழக்கம் இன்றும் பல பகுதி மக்களிடம் உள்ளது.

உடல் வளர்சிதை மாற்றம் :

Related image

துவரையானது குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்புச்சத்தினை கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை நீண்ட நேரம் ஏற்படுத்துவதுடன் உடல் வளர்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.

கொழுப்பு :

Image result for கொழுப்பு :

துவரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடை செய்கிறது. கொழுப்பு ஆற்றல் சேமிப்பதை தடுத்து ஆற்றலின் அளவினை அதிகரிக்க செய்கிறது. வறண்ட பகுதிகளில் வேலைசெய்பவர்கள் ஆற்றலை விரைவில் இழந்து விடுவார். அவர்களுக்கு துவரை நல்ல பலனைக் கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றல் :

Related image

துவரையில் உள்ள வைட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு ஆண்டிஆக்சிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தம் :

Image result for இரத்த அழுத்தம் :

துவரையில் உள்ள பொட்டாசியம், நார்சத்து, குறைந்த அளவு கொழுப்புசத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. மேலும் பொட்டாசியம் இரத்த அழுத்ததை சீராக்குகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment