முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு – வருமான வரித்துறை பதில் தர உத்தரவு!

விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் நாளை விளக்கமளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் வரிப்பாக்கி கண்டிபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment