இனி வரும் காலத்தில் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் – டிடிவி தினகரன்

நெல்லையில் தனியார் பள்ளியில், கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் ட்வீட். 

நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருநெல்வேலியில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அம்மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் விரைவில் முழு நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதற்கு நெல்லை சம்பவம் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. இனி வரும் காலத்தில் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.