தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய காமெடி ஷோவில் கலந்து கொண்டு தனது, நகைச்சுவையான பேச்சால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இமான் அண்ணாச்சி. இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் உள்ள 41 சவரன் நகையும், 10 ஆயிரம் மதிப்புள்ள வாட்சும் .

இதுகுறித்து, இவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய இமான் அண்ணாச்சி, ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க சார். அதான் கஷ்டமா இருக்குது. நிச்சயமா என் நகைங்க திரும்ப வந்திரும்னு நம்பிக்கை இருக்குது” என கலங்கிய கண்களுடன் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் அனைவரும் இருந்த போதே இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பதால், வீட்டில் இருப்பவர்களே திருடியிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.