‘எதற்கும் துணிந்தவன்’ மூன்றாம் லுக் போஸ்டர் வெளியீடு.! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ . இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று  திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டது. போஸ்டர்கள்  சிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இன்று நடிகர் சூர்யாவின் 46 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில்,  ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரையும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக அப்டேட் வெளியாகாமல் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு தொடர்ந்து அப்டேட் வருவது  உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.