ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுக வெற்றி முகமாக உள்ளது : கே.பி.முனுசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி முகமாக உள்ளது என கே.பி.முனுசாமி பேட்டி. 

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக போட்டியிட உள்ளது. ஈபிஎஸ் தரப்பில் தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகனும் போட்டியிட உள்ளனர்.

இந்த நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் இன்று காலை அண்ணாமலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி முகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், இளைஞரை காவல்துறை அதிகாரி பூட்ஸ் காலால் தாக்கியது கண்டிக்கத்தக்கது எருது விடும் விழாவுக்கு அனுமதி தருவதில் அரசு மாவட்ட நிர்வாகமும் குளறுபடி செய்துள்ளது என குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment