13 பேர் விடுதலை விவகாரம்.! தமிழக அரசு உத்தரவில் தலையிட விரும்பவில்லை.! உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.!

மேலவளைவு ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் 13 பேர் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளைவு கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். இதனை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். மேலும் அவரை மட்டுமல்லாமல் மேலும் 6 பெரும் கொலை செய்ய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இந்த 13 கைதிகளும் கடந்த 2019ஆம் ஆண்டு நன்னடத்தை காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பெயரில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று இந்த மனு மீதான விசாரணையில், தமிழக அரசு உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு 13 பேர் விடுதலையை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment