பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து படைத்த வரலாற்று சாதனை.!

பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது.

17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதன்முறையாக ஒரே தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது. முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே 10 விக்கெட் எடுத்து அப்ரார் அஹ்மது சாதனை படைத்துள்ளார். அப்ரார் அஹ்மது, அறிமுகபோட்டியிலேயே 10 விக்கெட் எடுக்கும் பாகிஸ்தானின் இரண்டாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. மேலும் இந்த தோல்வியின்மூலம் பாக்கிஸ்தான் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு குறைந்துள்ளது. 63 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் அடுத்தடுத்து 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment