சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி !104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிர்கொண்டது. இந்த போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி .இதன்படி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் மோர்கன் 57 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களை அடித்தார்.பின் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

ஆரம்ப முதலே தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.முக்கிய வீரர்களான அம்லா 13 ,மார்கம் 11,டூ பிளேஸிஸ் 5,டுமினி 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.டி காக் மற்றும் வான் டெர் டஸ்ஸன் மட்டும் ஓரளவு சிறப்பாக ஆடினார்கள்.பின் டி காக் 68 ரன்களிலும் , வான் டெர் டஸ்ஸன் 50 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 207 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆர்ச்சர் 3  விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Comment