ஆந்திர முதலமைச்சர்,ஒடிசா முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்  ஆந்திர மக்களுக்கு சேவை செய்வதில் உங்கள் தந்தையின் வழிநடத்துதலை நீங்கள் பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்  ஓடிசா முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக்கிற்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  உங்களது ஆற்றல்மிகு தலைமையின் கீழ் ஒடிசாவின் வளர்ச்சி வலிமையடையவும், தமிழகத்துடனான உறவில் புதிய உச்சத்தையும் தொடும் எனவும் நம்புகிறேன் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment