இங்கிலாந்து Vs பாகிஸ்தான் இன்று பலப்பரீச்சை மோதல்

உலகக்கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா Vs பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி தழுவியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மொத்த உள்ளது.இப்போட்டி நாட்டிங்காம்மில்  உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியானது இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு  நடைபெற உள்ளது.
இதுவரை இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணிகள் 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இங்கிலாந்து அணி 53 போட்டிகளிலும் , பாகிஸ்தான் அணி 31 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.3 போட்டிகள் மழைகாரணமாக நின்றது.

author avatar
murugan