#INDvENG : முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரின் 2-வது போட்டிவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஆட்டமிழக்காமல் ஜெய்ஸ்வால் 179* ரன்களுடனும் மறுபுறம் அஸ்வின் 5* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 396 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அகமது தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

அடுத்ததாக இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராலி மட்டும் நிதானமாக விளையாடி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பென் டக்கெட் 21, ஒல்லி போப் 23, ஜோ ரூட் 5 ரன் எடுத்தனர் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

பிறகு களத்திற்கு வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி தங்களுடைய விக்கெட்களை விழுந்த காரணத்தால் ரன்களை குவிக்க திணறியது. இறுதியாக இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3, அக்சர் படேல் 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment