தமிழக – கேரளா அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு மாநிலம் அரசுப் பேருந்தும், கேரளா மாநிலம் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதாவது, தமிழக அரசு பேருந்து ஒன்று களியக்காவிளையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருக்கையில், அதேபோல் எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா!

இந்த கோர விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், சிகிச்சை பெற்ற கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர் அனிஷ் கிருஷ்ணா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment