முதல் நாள் ஆட்ட இங்கிலாந்து 3 விக்கெட்டை இழந்து 53 ரன்..!

முதல் நாள் ஆட்ட இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா -இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இதனால், இந்திய அணி பெட்டிங் செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் களமிறங்க ரோகித் சர்மா (11) மற்றும் கே.எல் ராகுல் (12) ஆட்டமிழந்த பிறகு அடுத்து களமிறங்கிய புஜாரா 4 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய இந்திய கேப்டன் கோலி  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.

பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை. மத்தியில் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 57 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், ராபின்சன் 3 விக்கெட்டும்,  ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில்  இருவரும் நடையை காட்டினர். ரோரி பர்ன்ஸ் 5 , ஹசீப் ஹமீது ரன் எடுக்காமலும் வெளியேறினார்.

அடுத்து டேவிட் மாலன், ஜோ ரூட் களமிறங்க நிதானமாக விளையாடிய வந்த ஜோ ரூட் உமேஷ் வீசிய பந்தில் 21 ரன் எடுத்து போல்ட் ஆனார். முதல் நாள் ஆட்ட இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கிரேக் ஓவர்டன் 1, டேவிட் மாலன் 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

author avatar
murugan