20 வருடங்களுக்கு பிறகு ஓவலில் குறைந்த ஸ்கோரில் 5 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து..!

இங்கிலாந்து அணி 2001 -ஆம் ஆண்டுக்கு பிறகு ஓவலில் குறைந்த ரன்னில் தற்போது தான் 5 விக்கெட்டை இழந்தது.

இங்கிலாந்து -இந்தியா இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 17 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்தனர்.

களத்தில் கிரேக் ஓவர்டன் 1, டேவிட் மாலன் 26 ரன்கள் எடுத்து விளையாடி வந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கிரேக் ஓவர்டன் கோலியிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் டேவிட் மாலன் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி 62 ரன் எடுத்து 5 விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3, பும்ரா 2 விக்கெட்டை பறித்தனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி ஓவல் மைதனத்தில் 20 வருடங்களுக்கு பிறகு குறைந்த ரன்னில் 5 விக்கெட்டை இழந்துள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணி கடந்த 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியுடன் 55 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இங்கிலாந்து அணி 42 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளனர். ஒல்லி போப் 38*,  ஜானி பேர்ஸ்டோ 34* ரன் எடுத்து விளையாடி வருகின்றனர்.

author avatar
murugan