முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ரன் முன்னிலை..!

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 120 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து,  களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம்கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்கள் எடுத்தார். பின்னர், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். இவர்களின் விக்கெட்டை பறிக்க இந்திய அணி திணறியது. நிதானமான ஆட்டத்தால் இருவரும் அரைசதம் விளாசினார்.

இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 120 ரன்கள் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் ரோரி பர்ன்ஸ் 52*, ஹசீப் ஹமீது 60* ரன்களுடன் உள்ளனர்.

author avatar
murugan