எதிரிகளை விஞ்ஞான முறைப்படி வீழ்த்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றி நீங்கள் பாடுபட வேண்டும்.

அம்பாசமுத்திரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டமானது சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை இரண்டும் வெற்றி வாய்ப்பு காரணமாக இருக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களை மக்களுக்கு தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுத்துரைத்து, எதிரிகளை விஞ்ஞான முறைப்படி முறியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் தொகுதிக்கு 7,500 பேர் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் இளைஞர் பாசறை உள்ளனர். அவர்கள் மக்களிடம் அரசின் திட்டங்களை சிறப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றி நீங்கள் பாடுபட வேண்டும் என்றும், சாதிக்கவும், சாதனை புரியப் பிறந்தவர்கள் இளைஞர்கள் என்றும், தமிழகம் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.