ரூ.20 கோடியில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி பாவூர் சத்திரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி. விவசாயிகளின் நலனுக்காக ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். விவசாயிகள் பயிரிடம் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரமாண்ட சந்தை அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்ம் நெல்லை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு சந்தையை கட்ட அரசு பரிசீலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்