ட்விட்டர் குழுவில் சேர மறுத்த எலான் மஸ்க் – CEO பராக் அகர்வால் தகவல்

எலான் மஸ்க்,ட்விட்டர் இயக்குநர்கள் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார் என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க்,பிரபல முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கியதையடுத்து, ட்விட்டரின் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் விளங்குகிறார்.எனவே,அவரை ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,எலான் மஸ்க்,ட்விட்டர் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:”எலான் ட்விட்டர் குழுவில் சேர்வது பற்றியும்,எலோனுடன் நேரடியாகவும் பல விவாதங்கள் நடத்தினோம்.எலானை நிறுவனத்தின் நம்பிக்கையாளராக வைத்திருப்பது,அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் போலவே, நிறுவனம் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களுக்காகவும் செயல்பட வேண்டும் என்றும்,இது சிறந்த முன்னோக்கிய பாதை என்றும் நாங்கள் நம்பினோம்.இதனால்,ட்விட்டர் வாரியம் அவருக்கு ஒரு தனி இடத்தை வழங்கியது.

ஆனால்,இனி ட்விட்டர் குழுவில் சேரப் போவதில்லை என்று எலான் பகிர்ந்து கொண்டார்.எங்கள் வாரியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் பங்குதாரர்களிடமிருந்து உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம்.நாம் எடுக்கும் முடிவுகளும்,அதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது,வேறு யாருடையது அல்ல.பேச்சை குறைப்போம்,வேலை மற்றும் என்ன உருவாக்குகிறோம் என்பதில் கவனம் செலுத்துவோம்”,என்று தெரிவித்துள்ளார்.