உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! முதலிடம் யாருக்கு தெரியுமா?

Bezos vs Musk: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்துள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கள்கிழமை) டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 9 சதவீதம்) அமேசான் பங்குகளில் இருந்து பெறுகிறார்.  அதன்படி தற்போது எலான் மஸ்க் $197.7 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.

Read More – காசாவில் போர் நிறுத்தம் தேவை…அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்.!

அதேபோல ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியனாக உள்ளது. இதன்மூலம் 2021-க்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் பெசோஸ் முதல்முறையாகத் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார். ஒட்டு மொத்தமாக ஜெஃப் பெசோஸ் கடந்த 2017ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை முந்தி உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் முதலிடத்தில் சில காலம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment