ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Rameshwaram Cafe : பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிரபல ஓட்டலான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1ம் தேதி திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் டைம் பாம் குண்டை வைத்து வெடிக்க வைத்தார் என வெளியான சிசிடிவி கட்சிகள் மூலம் தெரியவந்தது.

Read More – மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: சென்னை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் உள்ளூர் காவல்துறை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பம் தொடர்பாக சந்தேக நபர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், வெடிகுண்டு வைத்து விட்டு தப்பி சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More – உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! முதலிடம் யாருக்கு தெரியுமா?

ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூர் ஓட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

Read More – மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா..!

அதன்படி, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மண்ணடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், ராமநாதபுரத்தில் கீழக்கரை உள்ளிட்ட 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தீவிரவாத செயலுக்கு ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment