மக்களவை தேர்தல் 12 மணி நிலவரப்படி தேர்தல் முடிவுகள்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

அதன் படி 12 மணி நிலவரப்படி இந்திய அளவில் பாஜக 328 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.காங்கிரஸ்  103 இடங்களில்  முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை திமுக 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது.அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று வாக்கு எண்ணிக்கைகள்  தெரிவிக்கின்றது.

author avatar
kavitha

Leave a Comment