மார்ச் மாதம் தேர்தல்..,சசிகலா வருகையால் மாற்றம் வராது – முதல்வர்

சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூரில் அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது என்றும் உட்கட்சி பூசல் என்பது அதிமுகவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்லா கட்சிகளிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள் என்பதால் நாட்கள் குறைவாக உள்ளது. பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருச்சியில் முதல்வர் பேட்டியளித்துள்ளார். இதனிடையே, சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி மாதம் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.