இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை.!

5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வளிமண்டல மேல் அடுக்கில் மேகக்கூட்டங்களின் சுழற்சி தீவிரமடைந்து வரும் காரணமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.