தமிழக அரசின் 5கோடி செலவில் கல்வி தொலைக்காட்சி இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியானது இன்று தொடங்கப்படுகிறது

தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்  பாடங்களை எளிதில் கற்றுக் கொள்ளவும் தமிழக அரசு சார்பாக கல்வி என்ற தொலைக்காட்சியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இந்த கல்வி தொலைக்காட்சிக்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில் சுமார் 5 கோடி செலவில் இதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு  9 மணி வரை ஒவ்வொரு  அரைமணி நேரத்துக்கும்  ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையில் மொத்தம் 32 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தத் தொடக்க விழாவானது இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.இந்த நிகழ்வை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அந்தந்த அரசுப்பள்ளிகளில் காணும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும்  கேபிள் இணைப்பு உள்ள பள்ளிகளில் நேரடியாக தொலைக்காட்சி மூலமாகவும் கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகளில் யூடுப் மூலமாக ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு  செல்கையில் ஒரு பெரிய  சுமையாக தங்களது புத்தக பைகளை சுமந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.ஆனால் தமிழக அரசின் இந்த புதிய கல்வி தொலைக்காட்சி மாணவர்களின் புத்தக சுமையை குறைத்து அறிவாற்றலை உயர்த்த பயனுள்ளதாக இருக்கும் என்று பெற்றோர்கள் பாராட்டுகின்றனர். இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை மாணவர்கள் யூடூபில் பார்த்துக் கொள்ளலாம் என்பது தனிச்சிறப்பு.

author avatar
Dinasuvadu desk