#கல்லூரி.,பல்கலை# தேர்வு- முதல்வர் கடிதம்

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளதாவது:

பெருந்தொற்று காரணத்தால் மாணவர்கள் தேர்வுகளை எதிர் கொள்வதில் சிக்கல் நேரிடும் என்று  தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் நிலவுவதாகவும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாது என்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளார்.

மேலும் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்திய அவர் பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க கோரிக்கையுன் விடுத்துள்ளார்.

மேலும் கல்லூரிகள்,விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்ட நிலையில் செப்., செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது.இறுதி செமஸ்டரை நடத்துவதா? இல்லையா? எனும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றும் அதில் கூறிப்பிட்டுள்ளார்.செப்., மாத இறுதிக்குள் கல்லூரி பல்கலை கழக தேர்வுகளை நடத்தி முடிக்க மத்திய மனிதவளத்துறை அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha