ஐ.நா சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி – ஜெயக்குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு என ஜெயக்குமார் விமர்சனம்.

அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகிறது. அதிமுக தலைமை அலுவலகம் சாவியை எடப்பாடி பழனிசாமி ஒப்படைக்க உயர்நீதிமன்றம் போட்ட  உத்தரவால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில் ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு. பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தும் ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை.  ஓபிஎஸ் ஐ.நா சபைக்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமி தரப்புத்தான் வெற்றி பெறும். அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவால், ஓபிஸ் தரப்பிற்கு இடி விழுந்தது போல் இருக்கும். கோயிலை இடிப்பது போல் ஓபிஎஸ் செய்த கீழ்த்தரமான செயல் தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது என்றும் அதிமுக தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்த ஓபிஎஸ் நினைக்கிறார் எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment