இன்று முதல் இந்த 5 இடங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்…! தமிழக அரசு அறிவிப்பு…!

  • தமிழகத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ-பாஸ் கட்டாயம்.

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்தது.

அதன்படி, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்தது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.