பெட்ரோல் – டீசல் விலை குறைப்புக்கு டாக்.ராமதாஸ் வரவேற்பு..!

பெட்ரோல் மீது ரூ.8, டீசல் மீது ரூ.6 கலால் வரியை வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது என டாக்.ராமதாஸ் ட்வீட். 

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு களால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல் மீது ரூ.8, டீசல் மீது ரூ.6 கலால் வரியை வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்களில் மூன்றில் இரு பங்கினருக்கு பயனளிக்காது!

சமையல் எரிவாயு மானியம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் எண்ணிக்கை 9 கோடி மட்டுமே. மொத்தமுள்ள 30 கோடி எரிவாயு இணைப்புகளில் 21 கோடி இணைப்புகளுக்கு இந்த மானியம் கிடைக்காது!

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மட்டுமின்றி, ஏழை & நடுத்தர மக்களாலும் எரிவாயு விலை உயர்வை தாங்க முடியாது. அந்த குடும்பங்களுக்கும் எரிவாயு மானியத்தை நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆகும் செலவு அதிகமாக இருக்காது. அதனால், எரிவாயு மானியத்தை நீட்டிக்க வேண்டும்!

மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால், மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை போக்க முன்வர வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment