பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு – ஓபிஎஸ் அறிக்கை

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதையடுத்து ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதையடுத்து, அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும்,  மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், அவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைத்து மக்கள் நலன் காக்க திமுக அரசை வலியுறுத்தி உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment